திருச்சி பாலக்கரை ரெட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோசப் என்பவரின் மகன் ஆலனுக்கு மே 28-ல் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிய பிறகு, அவற்றை பீரோவில் வைத்து சாவி அருகிலேயே வைத்துவிட்டு உறங்கச் சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 22 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது. இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.