திருச்சி கே கே நகர் தங்கையா நகர் 2வது கிராஸை சேர்ந்தவர் யோகேஷ் அமேசான் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி மதியம் அவரது தாய் மனைவி மற்றும் குழந்தைகளை விடுமுறையை முன்னிட்டு ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர்களை அனுப்பிய பிறகு வீட்டைப் பூட்டி விட்டு தானும் வேலைக்குச் சென்றார். அன்று நள்ளிரவு யோகேஷ் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த நான்கரை சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து யோகேஷ் கே கே நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை நிபுணர் உள்ளிட்ட தடயங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.