காட்டுப்புதூரில் முதியவர் தவறி விழுந்து பலி

50பார்த்தது
காட்டுப்புதூரில் முதியவர் தவறி விழுந்து பலி
காட்டுப்புத்தூர் முதலியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சரவணவேலு (வயது 82). இவர் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி திடீரென இறந்தார். அதன் பின்னர் தனிமையில் இருந்த சரவணவேலு எந்த நோய் நொடியும் இல்லாமல் வாழ்ந்து வந்தார். 

இந்த நிலையில் வீட்டின் படிக்கட்டிலிருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவரது முகம் மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்டது. உடனே உறவினர்கள் அவரை மீட்டு காட்டுப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் முதியவர் சரவணவேலு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர் பழனிவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி