திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சிறுபான்மை அணியின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பதற்கான ஆலோசனை கூட்டம் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ஒண்டி முத்து தலைமை தாங்கி புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து, ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். சிறுபான்மை அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் வி. சார்லஸ் முன்னிலை வகித்து பேசினார். இந்த கூட்டத்தில் பாஜக சிறுபான்மை அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.