கரூர் மாவட்டம் பிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், லால்குடி அருகே டீ வளவனூரில் புதிதாக கட்டப்படும் வீட்டில் கொத்தனாராகப் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, சுற்றுச்சுவர் அமைக்கப்படாத வீட்டின் மேல் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லால்குடி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.