திருச்சி தில்லைநகர் ஆழ்வார் தோப்பு கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் முகமது தபர் அலி வக்கீல் நேற்று முன்தினம் உள்ள பீமநகர் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வாலிபர் அவரை வழிமறித்து தகாத வார்த்தைகள் பேசினார்.
பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் முகமது தபர் அலியை தலையில் வெட்டி கொலை செய்ய முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில் வக்கீல் முகமது அலியை வெட்டியது சங்கிலியாண்டபுரம் பாத்திமா தெருவை சேர்ந்த நூர் அகமதுவின் மகன் இம்ரான் என்பதும், அவருடைய அக்காள் ரிஸ்வானாவை இரண்டாவது திருமணம் செய்து முகமது தபர் அலி திருமணமான மூன்று நாட்களில் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதும் தெரியவந்தது.
இதனால் நிஜாம் மொய்தீன் என்பவரை ரிஸ்வானா இரண்டாவது திருமணம் செய்தார். அதே நேரம் முகமது தபர் அலி ரிஸ்வானாவுடன் தொடர்ந்து உறவில் இருந்ததால் கடந்த 11 மாதங்களுக்கு முன் நிஜாம் மொய்தீன் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் ரிஸ்வானாவின் தம்பி இம்ரான் முகமது தபர் அலியை வழிமறித்து தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இது தொடர்பாக இம்ரானை போலீசார் கைது செய்தனர்.