முசிறி அருகே ஆலமரத்துபட்டியைச் சேர்ந்த தினேஷ் தனது நண்பர்களுடன் சமயபுரம் சென்று காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, சந்தப்பாளையம் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நால்வர் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து முசிறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.