திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் பகுதிக்கு உட்பட்ட கொப்பம்பட்டி, சோபனபுரம், வைரிசெட்டிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இங்கு குளிர்ச்சியான சூழல் நிலவியதால் அப்பகுதி மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.