திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செவிலியர் கல்லூரி மாணவி சீத்தாலட்சுமி தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறி, மாணவியின் உறவினர்களும் செவிலியர் கல்லூரி மாணவிகளும் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அமைச்சர் ரமேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை செய்ய மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.