திருச்சியைச் சேர்ந்த ஐசக் நியூட்டன் அமேசானில் மினி ப்ரொஜெக்டர் ஆர்டர் செய்த நிலையில், அவருக்கு டீசர்ட் பார்சலாக வந்தது. இது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் அவர் புகார் அளித்தார். விசாரணை முடிந்து, நீதிபதி ஐசக் நியூட்டனுக்கு ரூ. 25,000 இழப்பீடாகவும், ரூ. 10,000 வழக்குச் செலவாகவும் சேர்த்து மொத்தம் ரூ. 35,000 வழங்க அமேசான் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.