லால்குடி அருகே உள்ள இருதயமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முதியவர் ராபர்ட் வயது 70. நேற்று முன்தினம் இவர் காட்டூர் தேவாலயம் பகுதியில் சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது அப்பகுதியில் வந்த அரியமங்கலத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் ஓட்டிய இருசக்கர வாகனம் முதியவர் ராபர்ட் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த முதியவர் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ராபர்ட் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தை ஓட்டியவரான ஆனந்த் காயமடைந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் குறித்து திருவரம்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.