திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே சொரியம்பட்டியில் முருகன் என்பவர் தனது வீட்டு அருகே கால்நடைகளுக்காக வைத்திருந்த வைக்கோல் போரில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், சுமார் 20,000 ரூபாய் மதிப்பிலான வைக்கோல் முழுவதுமாக எரிந்து சாம்பலானது.