திருச்சி திருவரம்பூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக திருவரம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருவரம்பூர் கக்கன் காலனி பகுதியில் திருவரம்பூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சுரேஷ் மனைவி வித்யா என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்களை விற்பனை செய்ததால் போலீசார் அவரை கைது செய்தனர்.
அதேபோல் அதே பகுதியில் தங்கராஜ் மகன் மனோஜ்குமார், சுருளி கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம், காட்டூரைச் சேர்ந்த ஆரோக்கியமேரி ஆகிய நான்கு பேரை திருவரம்பூர் போலீசார் தனித்தனியாக கைது செய்ததோடு அவர்களை விற்பனைக்காக வைத்திருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.