திருச்சி விமான நிலையத்தில் ரூ.15.12 லட்சம் தங்கம் பறிமுதல்

83பார்த்தது
திருச்சி விமான நிலையத்தில் ரூ.15.12 லட்சம் தங்கம் பறிமுதல்
மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு, ஏர் ஏசியா விமானம் புதன்கிழமை (ஜனவரி 1) இரவு வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறையினர் வழக்கமான சோதனைக்கு உள்ளாக்கினர். 

அப்போது, பயணி ஒருவர் கொண்டு வந்த சமையல் எரிவாயு உருளையில் பயன்படுத்தும் ரெகுலேட்டர் சாதனத்தில் பால்ரஸ் வடிவில் 194 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 15.12 லட்சம். அதை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் அந்தப் பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி