திருச்சி மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற எஸ்சி/எஸ்டி மாணவர்களிடம் இருந்து ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 25ஆம் தேதி கடைசி நாளாகும். இது குறித்த விவரங்களுக்கு 0431-2463969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.