முசிறி அருகே செங்கமா முனியப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

352பார்த்தது
முசிறி அருகே கரிகாலி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செங்கமா முனியப்ப சுவாமி திருக்கோவில் மகாகும்பாபிஷேக விழா நேற்று 22 ஆம் தேதி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மங்கள இசை, திருமுறை பாராயணம், பல்வேறு பூஜைகள், யாகசாலை பிரவேச பூஜைகள் நடைபெற்றன. யாகசாலையில் இருந்து புறப்பட்ட கலசங்கள் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. ஸ்ரீ செங்கமா முனியப்ப சுவாமி, செங்கமலை நாச்சியார், தனி கருப்பு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி