திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இ-பைலிங் கட்டமைப்பு பணிகளை சரிசெய்த பிறகு இ-பைலிங்கை நடைமுறைப்படுத்தக் கோரி, இன்று (6-ஆம் தேதி) வரை நீதிமன்றப் பணியிலிருந்து விலகியிருக்க சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்த முடிவால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.