திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜை, பாலமுருகன், வீரமணி மற்றும் கமால் ஆகிய மூவர் தகாத வார்த்தையால் திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து, கீழே தள்ளி கண்ணாடியை சேதப்படுத்தி மிரட்டியுள்ளனர். மதுபோதையில் இருந்ததாக வீரமணி கூறினார். இது குறித்து புகாரளித்ததில், வீரமணியை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். பாலமுருகன், கமால் ஆகியோரை தேடி வருகின்றனர்.