திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சண்முகா நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. கடந்த மாதம் 28ஆம் தேதி வீட்டின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சில் இருந்து வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி இராமலட்சுமி அளித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.