திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வைப்பறையுடன் கூடிய சமையல் கூடத்தினை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். இதன் மூலம் பள்ளி மாணவர்களின் நலன் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.