சிங்களாந்தபுரம் மயான சாலைக்கு எம்எல்ஏ பூமி பூஜை

666பார்த்தது
சிங்களாந்தபுரம் மயான சாலைக்கு எம்எல்ஏ பூமி பூஜை
திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் சிங்களாந்தபுரம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மயானத்திற்கு செல்லும் தார் சாலை அமைக்கும் பணிக்கு, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்டச் சேர்மன் தர்மன் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யாமோகன்தாஸ், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.