திருச்சி நம்பர் ஒன் டோல்கட்டில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் ஒய்ரோடு சந்திப்பில் உள்ள சிக்னல் சில நாட்கள் இயங்கி, சில நாட்கள் இயங்காமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நாமக்கல், துறையூர், திருச்சி ஸ்ரீரங்கம் பகுதிகளிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள் இந்த சாலையில் வந்து செல்வதால், சிக்னல் கோளாறு விபத்துக்களுக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதில் தலையிட்டு, சிக்னலை சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.