திருச்சி மாவட்டம் சிறுமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை (6ஆம் தேதி) காலை 9:30 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டணத்துடன் கூடிய காளான் வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல்வேறு வகையான காளான்களை கண்டறிதல் மற்றும் அவற்றை வளர்க்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0431-2962854 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.