லால்குடி அருகே சாலையில் தீப்பற்றி எரிந்த ஓம்னி கார்

4பார்த்தது
தஞ்சை மாவட்டம் வரகூரைச் சேர்ந்த திருமுருகன், லால்குடியிலிருந்து வரகூர் நோக்கி ஆம்னி காரில் சென்று கொண்டிருந்தார். அரியூர் அருகே சென்றபோது கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. திருமுருகன் காரிலிருந்து தப்பி ஓடினார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி