திருச்சி பீமா நகர் கூனி பஜார் பகுதியைச் சேர்ந்த ஓவியர் பால் சார்லஸ், தொட்டியம் அருகே பாலசமுத்திரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓவியம் வரைந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில், பின்பக்க தலையில் பலத்த காயமடைந்த அவர், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.