முசிறி அருகே உள்ள தா. பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பிற்பகல் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யத் தொடங்கியது. அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் கோடை மழையால் கடும் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழை பயிர்களுக்கு உகந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.