தொட்டியத்தில் குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகள்

0பார்த்தது
தொட்டியம் கொங்கு நாடு பொறியியல் கல்லூரியில் பள்ளி கல்வித்துறை சார்பில் 66வது குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கி வரும் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் 38 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, இறகு பந்து, கையுந்து பந்து உள்ளிட்ட 12 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி