முசிறி தேன் எடுக்கசென்று கிணற்றுக்குள் விழுந்த வாலிபர்மீட்பு

2பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், முசிறி அருகே ஜம்புமடை பகுதியில் கோவில் கட்டுமானப் பணிக்காகச் சென்றிருந்தார். அங்குள்ள கிணற்றில் தேன்கூடு இருப்பதைப் பார்த்து, தேன் எடுக்க இறங்கியபோது தவறி கிணற்றில் விழுந்து காயமடைந்தார். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் முசிறி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், காயங்களுடன் இருந்த மணிகண்டனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்புடைய செய்தி