துறையூர் அருகே தளுகை ஊராட்சியில் தமிழக அரசு கட்டிய நூறு வீடுகள் கொண்ட சமத்துவபுரம் பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடந்ததாக அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் தாசில்தார் மற்றும் உப்பிலியபுரம் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பயனாளிகள் தேர்வில் குளறுபடி உறுதி செய்யப்பட்டால், தேர்வுப் பட்டியல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் முறையான ஆய்வு நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.