மணப்பாறை அருகே நொச்சி மேடு பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி (45) என்பவர், நேற்று இரவு திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றபோது, ஈச்சர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணப்பாறை போலீசார், லாரி ஓட்டுநர் தன்ராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.