திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நல்லியம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள கைலாச நாயகி சமேத கைலாசநாதர் ஆலயத்தில் இன்று தீர்த்தாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தங்கள் கைகளாலேயே சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவியப் பொடி, திருமஞ்சனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து மகிழ்ந்தனர். சுவாமிக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.