திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேர்தலில் தனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். பொன்மலை, காட்டூர், திருவெறும்பூர் பகுதிகளில் அவர் வீதி வீதியாக சென்று இந்த நன்றி அறிவிப்பு பணியை மேற்கொண்டார்.