தில்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலைய கேட் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் திங்கள்கிழமை இரவு வெடித்ததில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.