திருச்சி மாவட்டம், சோழமாதேவி வடக்குத் தெருவைச் சேர்ந்த ஜெயலலிதா (59), ஜனவரி 28-ஆம் தேதி உறவினர் வீட்டு திருமணத்திற்குச் சென்றுவிட்டு அரசுப் பேருந்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவர் அணிந்திருந்த 13 பவுன் தங்க நகைகள் அடங்கிய பர்ஸ் திருடு போனது. செவ்வாய்க்கிழமை திருவெறும்பூர் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.