திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகரில், வீட்டில் தாத்தா பூட்டிச் சென்ற இரண்டு சிறுவர்களில் ஒருவர் சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து இரு சிறுவர்களையும் மீட்டனர். அவர்கள் ஏன் பூட்டப்பட்டனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.