திருச்சி: மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது

582பார்த்தது
திருச்சி: மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வாகன சோதனையின் போது, புதுச்சேரியில் இருந்து மதுபான பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 240 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக பூதலூர் பொன்விளைந்தான்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணராஜா (25) மற்றும் ஜம்புகேஸ்வரன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி