திருச்சி: மலைத்தேனீக்கள் கொட்டி 27 தொழிலாளா்கள் காயம்

0பார்த்தது
திருச்சி: மலைத்தேனீக்கள் கொட்டி 27 தொழிலாளா்கள் காயம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சியில் புதன்கிழமை நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டிருந்த 27 தொழிலாளர்களை மலைத்தேனீக்கள் கொட்டியதில் அவர்கள் காயமடைந்தனர். காரைப்பட்டி அரசன்குளம் பகுதியில் நடைபெற்ற இந்த பணியின்போது, புதரிலிருந்து புறப்பட்ட தேனீக்கள் தொழிலாளர்களைத் தாக்கியுள்ளன. காயமடைந்த தொழிலாளர்கள் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி