திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், திருச்சி மாவட்டம் முழுவதும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் மற்றும் அதிவேக வாகனங்கள் மீது போலீசார் சோதனை நடத்தினர். திருவரம்பூர், ஜீயபுரம், லால்குடி, மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த சோதனையில், 69 ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டன. மேலும், வாகனங்களுக்குப் பின்புறம் வெளிச்சத்தில் ஒளிரக்கூடிய ஸ்டிக்கர்கள் காவல் துறையினரால் ஒட்டப்பட்டன.