திருச்சி: அ. தி. மு. க. வினர் திடீர் சாலை மறியல் போராட்டம்

1பார்த்தது
திருச்சி உறையூர் பகுதியில் நேற்று காலை தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தன. காலை 11 மணி அளவில் அ.தி.மு.க. வினர், பகுதி செயலாளர் என்.எஸ். பூபதி தலைமையிலும், அ.ம.மு.க. மாநில துணை தலைவர் தருண் முன்னிலையிலும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். வேட்பாளர் பிரச்சாரம் முடிந்த பின்னரும் தி.மு.க. கூட்டணி கட்சி கொடிகள் அகற்றப்படுவதில்லை என்றும், ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் பிரச்சாரத்தின் போது கொடி கட்ட அனுமதி தருவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

தொடர்புடைய செய்தி