AIADMK Connect செயலி மற்றும் கையடக்க பிரிண்டர்களைப் பயன்படுத்தி, அதிமுகவினர் 'விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி' என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் தில்லை நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று, திமுக ஆட்சியின் 'பனிஸ்மென்ட் பில்' என அவர்கள் கருதும் மின் கட்டண ரசீதுகளை அச்சிட்டு, இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரின் பார்வைக்குக் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.