திருச்சி வானியல் அறிவியல் மாநாடு அறிவிப்பு

1பார்த்தது
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டியின் பொதுச் செயலாளர் மனோகர், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான வானியல் விண்வெளி அறிவியல் மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் கோவையில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். இந்த மாநாட்டில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொள்ள உள்ளார். மாணவர்கள் இதில் பங்கேற்று பயனடையலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.