திருச்சி மாவட்டம் வேங்கூர் பெரியார் காலனியில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, அப்பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பெட்ரோல் கேனுடன் தீக்குளிக்க முயன்றார். இதையறிந்த காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, பெட்ரோல் கேனைப் பறிமுதல் செய்து, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.