திருச்சி திருவரம்பூர் அருகே துவாக்குடி கலைஞர் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் இவர் மேற்கூரை தகர சீட் அமைக்கும் காண்ட்ராக்டர். துவாக்குடி பெல் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சுமார் 35 அடி உயரத்தில் சீட் ஒர்க் வேலை நடந்ததை ஏறி பார்த்துக் கொண்டிருந்தார் அப்போது ஜெயராஜ் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார் இதில் பலத்த அடிபட்ட ஜெயராஜ் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இச்சம்பவம் குறித்து புகாரின் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.