திருச்சி: அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த போதை ஆசாமிகள்

3பார்த்தது
கோயம்புத்தூரிலிருந்து திருச்சிக்கு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தபோது, சாஸ்திரி ரோடு நீதிமன்றம் அருகே போதையில் இருந்த இரு இளைஞர்கள் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து இரண்டு பயணிகள் காயமடைந்தனர். கண்டோன்மெண்ட் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதை ஆசாமிகளால் சாலையில் நடமாட முடியாத நிலை உள்ள நிலையில், தற்போது பேருந்திலும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி