திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி இன்று பூமி பூஜையுடன் தொடங்கியது. திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜீலு ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். வணிகர் சங்கத்தின் பங்களிப்புடன் நடைபெறும் இந்தப் பணிக்காக, முதல் கட்டமாக ரூ. 25 லட்சத்தை கோவிந்தராஜூலு, மாநகராட்சி ஆணையர் மதுபாலனிடம் வழங்கினார்.