திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு ராஜேஷ்வரி (23) என்ற மகனும், இரு மகள்களும் உள்ளனர். இவர்களில் காரைக்காலிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் 2 ஆம் ஆண்டு பயின்று வந்த ராஜேஷ்வரி கடந்த சில மாதங்களாக கல்லூரிக்குச் செல்லவில்லையாம். இதுதொடர்பாக பெற்றோர் கேட்டபோது, தனக்கு சரியாகப் படிப்பு வரவில்லை எனக் கூறியுள்ளார். படிப்பைப் பாதியில் நிறுத்தியதால் மனஅழுத்தத்துக்கு ஆளான அவர், அதற்கான சிகிச்சையும் பெற்றார். இந்நிலையில் ராஜேஷ்வரி கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில் நவல்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.