திருச்சி, மாவட்டம் திருவெறும்பூர் சிப்காட் வளாகத்தில் திருச்சி கே கே நகர் பகுதியைச் சேர்ந்த பிண்டோ (82) என்பவர் பொறியியல் தொழிற்சாலை வைத்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தொழிற்சாலை மூடப்பட்டிருந்த நிலையில், அதன் காவலாளி ஷாஜகான் (65) மதிய உணவுக்காக வெளியே சென்று திரும்பியபோது மர்ம நபர்கள் தொழிற்சாலையின் பூட்டுகளை உடைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த தளவாடப் பொருள்களை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, தொழிற்சாலையில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் 4 பேர் திருட்டில் ஈடுபட்டது பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் திருவெறும்பூர், கைலாசபுரம் கணேஷ் நகரைச் சேர்ந்த பா. சக்திவேல் (21) என்பவரை போலீசார் வியாழக்கிழமை கைது செய்தனர். மற்றவர்களைத் தேடுகின்றனர்.