திருச்சி: துப்பாக்கி சுடும் தளத்தில் ஆட்கள் நடமாட தடை

224பார்த்தது
திருச்சி: துப்பாக்கி சுடும் தளத்தில் ஆட்கள் நடமாட தடை
மணப்பாறை தாலுகா அணியாப்பூர் கிராமம் வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில், இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை வீரர்கள் வருகிற 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 6-ந்தேதி (சனிக்கிழமை) வரை தினமும் காலை 7.30 முதல் மாலை 5.30 வரையிலும், இரவு 7 முதல் 10 மணி வரையிலும் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். எனவே, பயிற்சி நடைபெறும் நாட்களில் கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் யாரும் பயிற்சி தளத்திற்குள் நுழையக்கூடாது என திருச்சி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி