திருச்சி, ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக, கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ். வளர்மதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய கழக செயலாளர்கள் முத்துகருப்பன், ஜெயக்குமார், சிறுபான்மையினர் நல பிரிவு மாநில துணை செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட கழக பொருளாளர் சேவியர், IT wing மண்டல இணை செயலாளர் திருப்புகழ் செல்லதுரை மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.