திருச்சி: டாஸ்மாக் கடை அகற்றகோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

1பார்த்தது
திருச்சி பாபு ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மது அருந்துபவர்கள் சாலையில் நின்று கூச்சலிடுவதாலும், தகாத வார்த்தைகளில் பேசுவதாலும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்படுவதாகவும், இதனால் பல பிரச்சனைகள் உருவாவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். எனவே, டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
Job Suitcase

Jobs near you